ප්රංශයේ ශ්රී ලංකා ප්රජාතාන්ත්රික සමාජවාදී ජනරජයේ තානාපති කාර්යාලය
பிரான்சிலுள்ள இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தூதரகம்
Embassy of the Democratic Socialist Republic of Sri Lanka in France

ஆவணங்களை சட்டபூர்வமாக்குதல் (Legalization of Documents)
இலங்கை அரசாங்கம் மற்றும் பிரான்ஸ் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஆவணங்களை சட்டபூர்வமாக்குதல்.
விண்ணப்பதாரர்கள் இலங்கை வெளிவிவகார அமைச்சின் கொன்சுலர் பிரிவினால் கடந்த ஒரு வருட காலத்திற்குள் உறுதிப்படுத்தப்பட்ட அசல் இலங்கை ஆவணங்களையும் மற்றும் பிரான்ஸ் நாட்டின் வெளிவிவகார அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்ட அசல் பிரான்ஸ் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சினால் உறுதிப்படுத்தப்படாத ஆவணங்கள் மேற்கண்ட தேவைகளுக்காக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
தயவுசெய்து கொன்சுலர் பிரிவுடன் முன்கூட்டியே நேரத்தை முன்பதிவு செய்யவும்.
தேவையான ஆவணங்கள்:
01. இலங்கை ஆவணங்கள் (பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ், விவாகரத்துச் சான்றிதழ் போன்றவை) இலங்கை வெளிவிவகார அமைச்சின் கொன்சுலர் பிரிவினால் கடந்த ஒரு வருட காலத்திற்குள் சட்டபூர்வமாக்கப்பட்ட ஆவணங்கள்.
- விண்ணப்பதாரரின் விபரப் படிவம்
- அசல் இலங்கை ஆவணம்
அரசாங்கக் கட்டணம்: ஒரு ஆவணத்தை சட்டபூர்வமாக்குவதற்கு €41
02. பிரான்ஸ் ஏற்றுமதி ஆவணங்கள் (French Export Documents) பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சினால் சட்டபூர்வமாக்கப்பட்ட ஏற்றுமதி ஆவணங்கள்.
- விண்ணப்பதாரரின் விபரப் படிவம்
- அசல் ஏற்றுமதி ஆவணம்
அரசாங்கக் கட்டணம்: ஒரு ஆவணத்தை சட்டபூர்வமாக்குவதற்கு €57
3. பிரான்ஸ் ஆவணங்கள் (பிரான்ஸ் பிறப்புச் சான்றிதழ், பிரான்ஸ் மருத்துவச் சான்றிதழ் போன்றவை) பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சினால் சட்டபூர்வமாக்கப்பட்ட ஆவணங்கள்.
- விண்ணப்பதாரரின் விபரப் படிவம்
- அசல் பிரான்ஸ் ஆவணம்
அரசாங்கக் கட்டணம்: ஒரு ஆவணத்தை சட்டபூர்வமாக்குவதற்கு €45
கட்டணம் செலுத்தும் முறை:
விண்ணப்பதாரர் தூதரகத்திற்கு நேரில் வருகை தந்தால், கட்டணத்தை பணமாக செலுத்தலாம்.
குறிப்பு: கடன் அட்டைகள் (Credit Cards), பற்று அட்டைகள் (Debit Cards), தனிப்பட்ட அல்லது நிறுவன காசோலைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
விசேட குறிப்புகள்:
- சரியான நடைமுறையைப் பின்பற்றுவதற்கான ஆலோசனையைப் பெற முன்பதிவு செய்யும் போது, விண்ணப்பதாரர் தனது குடியுரிமை நிலையை அறிவிக்க வேண்டும்.
- கொன்சுலர் அதிகாரி அல்லது வரவேற்பு அலுவலர் விண்ணப்பதாரருக்கு அதற்கேற்ப ஆலோசனை வழங்குவார்.
- முழுமையற்ற விண்ணப்பங்கள் மற்றும் தேவையான ஆவணங்கள் இல்லாமை காரணமாக தாமதங்கள் ஏற்படலாம்.
- மொழிபெயர்ப்புகள் அசல் ஆவணங்களாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
- அனைத்து நகல்களும் A4 அளவு தாளில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- தபால் மூலம் அனுப்பப்படும் ஆவணங்கள் தொலைந்து போதல் அல்லது தாமதமடைவதற்கு பாரிஸிலுள்ள இலங்கைத் தூதரகம் எந்தவித பொறுப்பையும் ஏற்காது.
- தேவையானால், கூரியர் சேவையை விண்ணப்பதாரரே ஏற்பாடு செய்ய வேண்டும்.
- ரசீது வழங்கப்பட்ட பின்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணம் மீள வழங்கப்படமாட்டாது.
- தனிப்பட்ட மற்றும் நிறுவன காசோலைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
பிரான்ஸ் அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஆவணங்களின் (உதாரணமாக Commission Reject, Notaire Affidavit மற்றும் Attestation de Non-Recours) சரிபார்ப்பு நடவடிக்கைகள் Association Notariale de Gestion des Apostilles et Légalisations (ANGAL) நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலதிக தகவல்கள் மற்றும் நடைமுறைகளுக்காக வழங்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்துமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
பாரிஸில் வசிப்பவர்கள் மேலதிக தகவல்களைப் பெறுவதற்கு கீழே வழங்கப்பட்டுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம்.