ප්රංශයේ ශ්රී ලංකා ප්රජාතාන්ත්රික සමාජවාදී ජනරජයේ තානාපති කාර්යාලය
பிரான்சிலுள்ள இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தூதரகம்
Embassy of the Democratic Socialist Republic of Sri Lanka in France

திருமணமாகாதவர் சான்றிதழ் மற்றும் வழக்கச் சான்றிதழ் (Certificate of Célibat & Certificate of Coutume)
தகுதி:
பிரான்ஸ் மற்றும் இத்தூதரகத்தின் இணை அங்கீகாரம் பெற்றுள்ள ஸ்பெயின், போர்ச்சுகல், மொனாக்கோ மற்றும் அன்டோரா ஆகிய நாடுகளில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகள்.
இந்த சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்க பின்வரும் இரண்டு முறைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம்.
1. தூதரகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பித்தல் இலங்கைத் தூதரகம், பிரான்ஸ்16 Rue Spontini,75016 Paris, France
2. தேவையான அனைத்து ஆவணங்களையும் தபால் மூலம் அனுப்புதல் Embassy of Sri Lanka in France, 16 Rue Spontini, 75016 Paris
திருமணமாகாதவர் சான்றிதழ் மற்றும் வழக்கச் சான்றிதழ் வழங்குதல்
பிரான்சில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளின் கோரிக்கையின் அடிப்படையில், இலங்கைத் தூதரகம் திருமணமாகாதவர் சான்றிதழ் (Certificate of Célibat) மற்றும் வழக்கச் சான்றிதழ் (Certificate of Coutume) ஆகியவற்றை வழங்குகிறது.
சான்றிதழ் விண்ணப்பதாரரிடம் நேரடியாக வழங்கப்படும்.
விண்ணப்பதாரர் தனது திருமணத்தை பதிவு செய்ய எதிர்பார்க்கும் நகர சபையின் (Town Council) சரியான பெயர் மற்றும் முகவரியை வழங்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தமது திருமணப் பதிவுக்காக நகர சபையில் விண்ணப்பித்த பின்னர், திருமண அறிவிப்பு (Notice of Marriage) நகர சபையினால் தூதரகத்திற்கு அனுப்பப்படும்.
அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கைப் பிரஜை/பிரஜைகளுக்கு தூதரகம் சான்றிதழ் வழங்கியிருந்தால், அது பொதுமக்களின் கவனத்திற்காக 14 நாட்களுக்கு தூதரகத்தின் பொது அறிவிப்பு பகுதியில் காட்சிப்படுத்தப்படும்.
14 நாட்கள் நிறைவடைந்த பின்னர், குறித்த திருமணத்திற்கு எதிர்ப்பு அல்லது பதில் ஏதேனும் கிடைத்துள்ளதா என்பதை தூதரகம் சம்பந்தப்பட்ட நகர சபைக்கு அறிவிக்கும்.
குறித்த திருமணத்திற்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை என்பதற்கான உறுதிப்படுத்தல் கடிதம், இரு தரப்பினரும் தூதரகத்திலிருந்து தேவையான சான்றிதழ்களைப் பெற்றிருந்தால் மட்டுமே இந்தத் தூதரகத்தினால் வழங்கப்படும்.
தூதரகத்திலிருந்து சான்றிதழ் பெறாத இலங்கைப் பிரஜைகள் தொடர்பான நகர சபைகளிலிருந்து பெறப்படும் திருமண அறிவிப்புகள், பொதுமக்களின் கவனத்திற்காக தூதரகத்தில் காட்சிப்படுத்தப்படமாட்டாது. மேலும், அவற்றிற்கு எந்தவித பதிலும் வழங்கப்படமாட்டாது.
எனவே, திருமணப் பதிவுக்காக நகர சபையில் விண்ணப்பிப்பதற்கு முன்னர், நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளின் படி தூதரகத்திலிருந்து தேவையான சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளுமாறு விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
வெளிநாட்டு மொழிகளில் வழங்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களும் உத்தியோகபூர்வ ஆங்கில மொழிபெயர்ப்புடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
பிரெஞ்சு அதிகாரிகளினால் வழங்கப்பட்ட அனைத்து ஆவணங்களும், உரிய கையொப்பங்கள் மற்றும் முத்திரைகளுடன் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சினால் சட்டபூர்வமாக்கப்பட்டிருக்க வேண்டும்.