ප්රංශයේ ශ්රී ලංකා ප්රජාතාන්ත්රික සමාජවාදී ජනරජයේ තානාපති කාර්යාලය
பிரான்சிலுள்ள இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தூதரகம்
Embassy of the Democratic Socialist Republic of Sri Lanka in France

பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை இணையவழியில் விண்ணப்பித்தல்.
விண்ணப்பிக்கும் படிமுறைகள் - வெளிநாட்டு விண்ணப்பதாரர்கள்
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் இப்போது தங்களது பிறப்பு, திருமணம் அல்லது இறப்புச் சான்றிதழ்கள் ஆன்லைனில் உள்ளதா என்பதைச் சரிபார்க்கலாம்.
சம்பந்தப்பட்ட இலங்கைத் தூதரகத்திற்கு eBMD போர்டல் மூலம் உங்கள் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும், உங்கள் சான்றிதழ் கிடைக்கக்கூடிய தன்மை குறித்து மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு அறிவிக்கப்படும்.
இந்த வலைத்தளத்திற்குச் செல்லவும்: https://online.ebmd.rgd.gov.lk
- விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும் – நீங்கள் கோரும் பிறப்பு, திருமணம் அல்லது இறப்புச் சான்றிதழ் தொடர்பான துல்லியமான விபரங்களை உள்ளிடவும்.
- கோரப்பட்ட சான்றிதழ் eBMD அமைப்பில் காணப்பட்டால், உங்கள் தூதரக அலுவலகத்திற்குச் செல்வதற்கான மேலதிக வழிமுறைகளுடன் கூடிய உறுதிப்படுத்தல் மின்னஞ்சலைப் பெறுவீர்கள்.
- கட்டணங்களை தூதரகம் அல்லது மிஷனில் (Mission) மட்டுமே செலுத்த முடியும்; வெளிநாட்டு விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் கட்டண வசதி இல்லை.
- சான்றிதழ்கள் அச்சிடப்பட்ட ஆவணங்களாக (Physical documents) மட்டுமே வழங்கப்படும், எந்தவொரு சூழ்நிலையிலும் மின்னஞ்சல் அல்லது டிஜிட்டல் முறையில் அனுப்பப்பட மாட்டாது.