ප්රංශයේ ශ්රී ලංකා ප්රජාතාන්ත්රික සමාජවාදී ජනරජයේ තානාපති කාර්යාලය
பிரான்சிலுள்ள இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தூதரகம்
Embassy of the Democratic Socialist Republic of Sri Lanka in France

ஆவண சான்றளிப்பு
தகுதி
பிரான்ஸ் மற்றும் இத்தூதரகத்தின் இணை அங்கீகாரம் பெற்றுள்ள ஸ்பெயின், போர்ச்சுகல், மொனாக்கோ மற்றும் அன்டோரா ஆகிய நாடுகளில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகள்.
இந்த சேவைக்காக விண்ணப்பிக்க பின்வரும் இரண்டு முறைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம்.
1. தூதரகத்திற்கு நேரில் வருகை தந்து விண்ணப்பித்தல்
பிரான்சிலுள்ள இலங்கைத் தூதரகம்16 Rue Spontini,75016 Paris, France
2. தேவையான அனைத்து ஆவணங்களையும் தபால் மூலம் அனுப்புதல்
Embassy of Sri Lanka in France, 16 Rue Spontini, 75016 Paris
விண்ணப்பதாரரின் கோரிக்கையின் பேரில், இலங்கை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள குடும்பப்பெயர், பிற பெயர்கள், பிறந்த தேதி மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் சான்றிதழ் வழங்கப்படும்.
செல்லுபடியாகும் இலங்கை ஆவணங்கள் (கடவுச்சீட்டு அல்லது பிறப்புச் சான்றிதழ்) கொண்ட இலங்கைப் பிரஜைகள் மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள், பாரிஸிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் கொன்சுலர் அதிகாரியிடமிருந்து இந்தச் சான்றிதழைப் பெறலாம்.
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
- கடவுச்சீட்டின் அடிப்படையில்
- விண்ணப்பதாரரின் விபரப் படிவம் (Applicant's Details Form)
- அசல் இலங்கைக் கடவுச்சீட்டு
- அதன் நகல்
- அரசாங்கக் கட்டணம்: ஒவ்வொரு சான்றளிப்பிற்கும் €41
- பிறப்புச் சான்றிதழின் அடிப்படையில் (பிறப்புச் சான்றிதழ் கடந்த ஒரு ஆண்டுக்குள் இலங்கை வெளிவிவகார அமைச்சினால் சட்டபூர்வமாக்கப்பட்டிருக்க வேண்டும்.)
- விண்ணப்பதாரரின் விபரப் படிவம் (Applicant's Details Form)
- இலங்கை வெளிவிவகார அமைச்சினால் சட்டபூர்வமாக்கப்பட்ட அசல் பிறப்புச் சான்றிதழ்
- அதன் நகல்
- அரசாங்கக் கட்டணம்: ஒவ்வொரு சான்றளிப்பிற்கும் €41
- பிறப்புச் சான்றிதழ் மற்றும் கடவுச்சீட்டின் அடிப்படையில் (பிறப்புச் சான்றிதழ் கடந்த ஒரு ஆண்டுக்குள் இலங்கை வெளிவிவகார அமைச்சினால் சட்டபூர்வமாக்கப்பட்டிருக்க வேண்டும்.)
- விண்ணப்பதாரரின் விபரப் படிவம் (Applicant's Details Form)
- அசல் இலங்கைக் கடவுச்சீட்டு மற்றும் அதன் நகல்
- இலங்கை வெளிவிவகார அமைச்சினால் சட்டபூர்வமாக்கப்பட்ட அசல் பிறப்புச் சான்றிதழ் மற்றும் அதன் நகல்
- அரசாங்கக் கட்டணம்: ஒவ்வொரு சான்றளிப்பிற்கும் €41
கட்டணம் செலுத்தும் முறை
விண்ணப்பதாரர் தூதரகத்திற்கு நேரில் வருகை தந்தால், பணமாக கட்டணம் செலுத்தலாம்.
குறிப்பு: கடன் அட்டைகள் (Credit Cards), பற்று அட்டைகள் (Debit Cards), தனிப்பட்ட அல்லது நிறுவன காசோலைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
விசேட குறிப்புகள்
- சரியான நடைமுறையைப் பின்பற்றுவதற்கான ஆலோசனையைப் பெற முன்பதிவு செய்யும் போது, விண்ணப்பதாரர் தனது குடியுரிமை நிலையை அறிவிக்க வேண்டும்.
- கொன்சுலர் அதிகாரி அல்லது வரவேற்பு அலுவலர் அதற்கேற்ப ஆலோசனை வழங்குவார்.
- முழுமையற்ற விண்ணப்பங்கள் மற்றும் தேவையான ஆவணங்கள் இல்லாமை காரணமாக தாமதங்கள் ஏற்படலாம்.
- மொழிபெயர்ப்புகள் அசல் ஆவணங்களாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
- அனைத்து நகல்களும் A4 அளவு தாளில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- தபால் மூலம் அனுப்பப்படும் ஆவணங்கள் இழக்கப்படுதல் அல்லது தாமதமடைவதற்கு பாரிஸிலுள்ள இலங்கைத் தூதரகம் எந்தவித பொறுப்பையும் ஏற்காது. தேவையானால், கூரியர் சேவையை விண்ணப்பதாரரே ஏற்பாடு செய்ய வேண்டும்.
- ரசீது வழங்கப்பட்ட பின்னர் கட்டணம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மீள வழங்கப்படமாட்டாது.
- தனிப்பட்ட மற்றும் நிறுவன காசோலைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.